1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (10:35 IST)

டாம் லாதம் இரட்டை சதம்… 521 ரன்கள் சேர்த்து டிக்ளேர்-பங்களாதேஷை பந்தாடும் நியுசிலாந்து!

நியுசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

யாரும் எதிர்பாராத விதமாக முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது பங்களாதேஷ். சொந்த மண்ணில் அடைந்த தோல்வியால் வெகுண்டெழுந்த நியுசிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட்டில் பங்களாதேஷை பந்தாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியுசிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் தற்காலிக கேப்டன் டாம் லாதம் 252 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரரான டெவன் கான்வாய் 106 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நியுசிலாந்து அணொ 521 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி தற்போது வரை 6 விக்கெட்களை இழந்து 109 ரன்கள் சேர்த்து போராடி வருகிறது.