அடித்த ரன்களை விட, வைத்திருக்கும் பேட்டுகள் அதிகம் - ஹர்பஜன் ‘டைமிங் காமெடி’
தோல்வி சோகத்தில் இருந்த இந்திய அணிய், ஹர்பஜன் சிங் டைமிங் காமெடியால் ஓய்வறை கலகலப்பாக மாறிய சம்பவத்தை கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் நினைவு கூர்ந்துள்ளார்.
2005ஆம் ஆண்டு இந்தியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் கலந்துகொண்ட முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய 44 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு உள்ளானது. முதல் 8 பேர்களில் வீரேந்தர் சேவாக் [15] தவிர, கங்குலி, டிராவிட், தோனி உள்ளிட்ட மற்ற யாரும் இரட்டை இலக்கத்தை தொடக்கவில்லை.
இறுதியில் 37.2 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசியாக களமிறங்கிய ஜெய் பிரகாஷ் யாதவ் [69], இர்ஃபான் பதான் [50] குவித்து ஓரளவு கவுரமான ஸ்கோர் எடுக்க உதவினர்.
இதற்கிடையில் ஹர்பஜன் சிங் ஒரு காமெடி செய்துள்ளார். அணி மோசமாக ஆடிய சோகத்தில் அனைவரும் பெவிலியனில் அமர்ந்து இருந்துள்ளனர். ஹர்பஜன் சிங் அங்குள்ளவர்களிடம், ‘தாங்கள் வைத்திருக்கும் பேட்டுகளை எண்ணுங்கள்’ என்று கூறியுள்ளார்.
அனைவரும் தங்களிடம் உள்ள பேட்டுகளை எண்ணி உள்ளனர். மொத்தம் 15 பேருடையதையும் சேர்த்து 110 பேட்டுகள் இருந்துள்ளது. உடனே ஹர்பஜன், “நாம் அடித்த ரன்களை, நாம் வைத்திருக்கும் பேட்டுகள் தான் அதிகமாக இருகின்றது” என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு அங்குள்ள அனைவரும், சோகத்தை மறந்து சிரிக்கத் தொடங்கி விட்டனர். இதனை சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் நினைவுக் கூர்ந்துள்ளார்.