1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mike mohan harah movie ott release date details

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

மைக் மோகன்
கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். இந்த படம் ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்காக மோகன் பல இணையதளங்களில் நேர்காணல் கொடுத்திருந்தார். அதன் மூலம் படத்தின் மேல் நல்ல கவனம் கிடைத்தது.

இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் நாளை ஜூலை 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!