மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ’அதிரடி’ ஹைடன்
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் கட்டுப்பாடு சங்கம் நடத்தும் ’தமிழ்நாடு பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 18ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில், தூத்துக்குடி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் தமிழ்நாடு பிரிமியர் லீக்’ போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை வந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று அங்கு காலை 11.45 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.