ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (17:03 IST)

பல சாதனைகள்... ஒரு நாயகன்... கோலிக்கு குவியும் பாராட்டு!!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் கோலியின் சதம் போட்டியில் வெற்றி பெற உதவியது. 
 
நேற்றைய போட்டியில் கோலி அடித்த சதம் இந்த வருடத்தில் அவர் அடிக்கும் இரண்டாவது சதமாகும். ஏற்கனவே அவர் டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்திருந்தார். 119 பந்துகளை எதிர்கொண்டு 112 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் அடக்கம்.
 
இது கோலியின் 33 வது ஒருநாள் சதம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை சேர்த்து கோலி மொத்தம் 54 சதம் அடித்துள்ளார். இது இவர் தென் ஆப்பிரிக்க மண்ணில் அடிக்கும் முதல் சதம். 
 
அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியின் தொடர் வெற்றியை ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், கோலிக்கு நேற்று ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 
 
கேப்டன் பதவியில் கோலி தனது 11 வது செஞ்சூரியை அடித்து கங்குலியின் சாதனையை சமன் செய்தார். கங்குலி கேப்டன் பதவியில் 142 போட்டியில் 11 சதம் அடித்து இருந்ததே சாதனையாக உள்ளது. கோலி 41 இன்னிங்சில் இதை எடுத்து சமன் செய்துள்ளார். 
 
கேப்டனாக ரிக்கி பாண்டிங் 22 சத்தமும், டி வில்லியர்ஸ் 13 சதமும் அடித்துள்ளனர். இரண்டையும் கோலி விரைவில் எட்டிப்பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, இதற்காக கிரிக்கெட் வீரர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.