திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (18:25 IST)

கோலி, விஜய் சதத்தால் இந்திய அணி முன்னிலை

மும்பையில் நடைபெறும் 4வது போட்டி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்கள் குவித்தது.


 

 
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்கள் குவித்துள்ளது.
 
இந்திய அணி சார்பில் முரளி விஜய் சதம் அடித்தார். கோலி 147 ரன்களுடன் களத்தில் உள்ளார். விஜய் மற்றும் கோலி சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. 
 
இந்த பொட்டியில் கோலி சதம் கண்டதன் மூலம் பல சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். கேப்டனாக ஒரே ஆண்டில் 1000 ரன்கள் கடந்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.