1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (11:44 IST)

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் நேற்று மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 86 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் முதல் 70 இன்னிங்ஸ்களில் கபில்தேவ் 156 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதுவே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அதை இப்போது முறியடித்துள்ளார். அவர் 70 இன்னிங்ஸ்களில் 163 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.