1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (14:39 IST)

அதிக விக்கெட்கள் வீழ்த்திய இடது கை ஸ்பின்னர்… சாதனை படைக்க போகும் ஜடேஜா!

இந்திய அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வருபவர் ரவிந்தர ஜடேஜா. மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்காக விளையாடி கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கி வரும் ஜடேஜா, தர்மசாலாவில் நடக்க உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பந்துவீச்சாளராக ஒரு முக்கியமான சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 292 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கும் ஜடேஜா இன்னும் 6 விக்கெட்களை வீழ்த்தினால் உலகளவில் அதிக விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைப்பார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள்களாக இலங்கையின் ரங்கனா ஹெராத் - 433 விக்கெட்டுகள், நியுசிலாந்தின் டேனியல் வெட்டோரி - 362 விக்கெட்டுகள், இங்கிலாந்தின் டெரெக் அண்டர்வுட் - 297 விக்கெட்டுகள், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா  - 292 விக்கெட்டுகள் மற்றும் இந்தியாவின் பிஷன் சிங் பேடி  - 266 விக்கெட்டுகள் எடுத்து முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.