ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (11:53 IST)

கோலியை குறை கூறிய இங்கிலாந்து வீரர்: வரிந்து கட்டி விளாசிய பாகிஸ்தான் வீரர்!

கோலியை குறை கூறிய இங்கிலாந்து வீரர்: வரிந்து கட்டி விளாசிய பாகிஸ்தான் வீரர்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து வீரர் ஆண்டர்ஸன் பேட்டி ஒன்றில் குறை கூறினார். இதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்து விளாசி உள்ளார்.


 
 
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் கோலி இரட்டை சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த டெஸ்ட் போட்டியின் போது செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜிம்மி ஆண்டர்ஸன் கோலியின் பேட்டிங் ஸ்டைலை குறை கூறினார்.
 
விராட் கோலி தனது பேட்டிங் திறனை மேம்படுத்திக்கொள்ளவில்லை. இங்கிலாந்து பிட்சுகளில் முன்பு எங்களின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள கோலி திணறினார் இப்போதும் அப்படித்தான் உள்ளார் என ஆண்டர்ஸன் கூறினார்.
 
இதற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார். ஜிம்மி ஆண்டர்ஸன் இந்தியாவில் விக்கெட்டுகளை எடுத்து நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஆனல் அவர் கோலியின் பேட்டிங்கை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது.
 
இங்கிலாந்தில் ரன் குவிக்கும் வீரர்கள் தான் சிறந்து பேட்ஸ்மேன் என்பது இல்லை. தேவையான நேரத்தில் அணிக்கு தேவைப்படுவது போல் விளையாடுபவர் தான் சிறந்த வீரர். அதை கோலி சிறப்பாக செய்து வருகிறார் என கூறினார் இன்சமாம்.