இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு


Abimukatheesh| Last Updated: திங்கள், 10 ஜூலை 2017 (12:56 IST)
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்கும் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 
மேற்கிந்திய தீவுகளில் சுற்ற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டியில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. டி20 போட்டியில் தொல்வி அடைந்தது. 
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேற்கிந்திய தீவுகளில் எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :