தவான், புஜாரா சதத்தால் இந்திய அணி 600 ரன்கள் குவிப்பு


Abimukatheesh| Last Updated: வியாழன், 27 ஜூலை 2017 (14:22 IST)
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாளான இன்று 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. 
 
தொடக்க வீரராக களமிறங்கிய தவான் அதிக பட்சமாக 168 பந்துகளில் 190 ரன்கள் குவித்தார். புஜாரா 153 ரன்கள் குவித்தார். தற்போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இந்திய அணி 600 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இந்தியா வெற்றிப்பெறவே அதிக வாய்ப்புள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :