ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:53 IST)

ஒரே ஒரு வெற்றி… இரண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியை இழந்த இந்திய அணி மீண்டெழுந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்டுள்ள பிட்ச்சால்தான் இரண்டே நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது என கிரிக்கெட் உலகில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிடும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கேப்டவுன் வெற்றி மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தரவரிசை ஆகிய இரண்டிலும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா இந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா என 54.16 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.