1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 13 ஜூன் 2016 (16:20 IST)

சுருண்டது ஜிம்பாப்வே : 126 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 

 
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி இந்திய அணி வென்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக உசி சிபண்டா 53 ரன்களும், சிபாபா 21 ரன்களும், சிக்கந்தர் ரஸா 16 ரன்களும் எடுத்தனர்.
 
மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். ஒருகட்டத்தில் 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற ஓரளவு வலுவான நிலையில் இருந்தது. ஆனால், மேற்கொண்டு 20 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
 
இந்திய அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், பரிந்தர் சரண், தவன் குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.