வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (15:38 IST)

தோனியை விஞ்ச முடியும் என நான் நினைக்கவில்லை- பேட் கம்மின்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெரும் ஐபில் கிரிக்கெட் தொடருக்கு என உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்த ஆண்டு  ஐபிஎல் தொடர் சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது 10 அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிகள் நடந்து வருகிறது.
 
சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். 
 
எனவே இளம் வீரர் ருத்துராஜுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர்.
 
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்( ஆஸ்திரேலியா) முன்னாள் கேப்டன் தோனியை புகழ்ந்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது; ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான். அத்துடன் எதிரணியின் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆனால், தோனி போன்ற ஒருவரை விஞ்ச முடியும் என  நான் நினைக்கவில்லை;  நம்மா முடிந்தவரை முயற்சி செய்து விளையாடினால் வெற்றி பெறலாம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
 
இன்றிரவு 7-30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட  உள்ளது குறிப்பிடத்தக்கது.