1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 16 பிப்ரவரி 2015 (14:54 IST)

”ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்குத் தெரியவில்லை” - தோல்வி குறித்து மிஸ்பா உல் ஹக்

ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்குத் தெரியவில்லை என்று உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது குறித்து மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட இந்திய அணியை தோற்கடித்ததில்லை. இந்த சோக வரலாறு நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. நேற்றையப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இது குறித்து கூறிய மிஸ்பா உல் ஹக், ”ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்களும் இது குறித்து எதுவும் செய்ய முடியாது. அவர்கள் சிறந்த முறையில் விளையாடியதாக நான் நினைக்கிறேன். அவர்களிடமிருந்து தொழில் முறையிலான ஆட்டம் அவர்களிடமிருந்து வெளிப்பட்டது.

 
அவர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவை நன்றாகவே இருந்தது. எனவே இந்த வெற்றிக்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. 
 
இந்த ஆட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கிறேன். எனவே நாங்கள் அடுத்த போட்டியை குறித்து சிந்திப்பது அவசியம். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் போராடித்தான் தோல்வியை தழுவுகிறோம். குறிப்பாக, உலகக்கோப்பையில். நாங்கள் இந்த தொடரில் வெற்றி பெற்றாக வேண்டும்”
 
மேலும் அவர் கூறுகையில், இந்திய அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர் என்பதும் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருப்பதும் எல்லோருக்குமே தெரியும். அவர்கள் இன்று சிறந்த முறையில் விளையாடினார்கள். அவர்களிடம் நல்ல திறமை இருக்கிறது. அந்த திறமையை இன்று காண்பித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.