வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (16:31 IST)

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இதனால் 140 கோடி இந்திய மக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹர்திக் பாண்ட்யா. அதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. ஆனால் உலகக் கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே அவரின் ஆட்டம் சீராகி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பினார்.

இறுதிப் போட்டியில் அவர் பவுலிங்கில் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் அவர் சுமார் 200 ரன்களும் 15 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவர் ஐசிசி தரவரிசைகளுக்கான பட்டியலில் ஆல்ரவுண்டர்கள் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.