வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (15:10 IST)

பேட்டிங்கில் சொதப்பும் தோனிக்கு வாய்ப்பு; எனக்கு மட்டும் இல்லை: கொந்தளிக்கும் ஹர்பஜன்சிங்!

பேட்டிங்கில் சொதப்பும் தோனிக்கு வாய்ப்பு; எனக்கு மட்டும் இல்லை: கொந்தளிக்கும் ஹர்பஜன்சிங்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் தற்போது மோசமாக உள்ளது, அவருக்கு எப்படி இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கலாம், எனக்கு மட்டும் ஏன் அந்த காவுரவம் கிடைப்பதில்லை என ஹர்பஜன் சிங் கொந்தளித்துள்ளார்.


 
 
இன்னும் கொஞ்ச நாட்களில் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இந்த அணியில் கௌதம் கம்பீர், ஹர்பஜன் போன்ற சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதனை ஆட்சேபிக்கும் வகையில் ஹர்பஜன்சிங் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
 
தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹர்பஜன்சிங், தோனி பேட்டிங் தவிர்த்த வேறு பல விஷயங்களிலும் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் முன்பு போல இப்போது பேட்டிங் செய்ய முடிவதில்லை என்பதை கவனிக்க முடிகிறது.
 
19 வருடமாக நானும் கிரிகெட் விளையாடி வருகிறேன். ஆனால் தோனிக்கு அளிக்கப்படும் கவுரவம் ஏன் எனக்கு அளிக்கப்படுவதில்லை. உலக கோப்பையை வென்ற இரண்டு அணிகளிலும் நான் இடம் பிடித்தேன். ஆனால் ஒருவருக்கு அளிக்கப்படும் கவுரவம் மற்றவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. முக்கியத்துவம் தரப்படாத வீரர்கள் பட்டியலில் நானும் ஒருவன் என்றார்.