இந்தியா - பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு இலவச பீர்


Abimukatheesh| Last Updated: சனி, 17 ஜூன் 2017 (18:12 IST)
தலைநகர் டெல்லியில் உள்ள பார் ஒன்றில் இந்திய ஜெர்ஸி அணிந்து வந்தால் இலவசமாக பீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
நாளை நடைப்பெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் இரு நாட்டு ரசிகர்களும் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள Lanterns Kitchen and Bar என்ற பார் வசதிக்கொண்ட உணவகத்தில் இந்திய ஜெர்ஸி அணிந்து வருபவர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று Curry Bistro என்ற உணவகத்தில் பாகிஸ்தான் அணியில் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் 20% சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
 
மேலும் இந்த இரண்டு இடங்களில் பெரிய திரையில் இறுதிப்போட்டி நேரலையாக ஒளிப்பரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :