திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (10:40 IST)

அந்த ஐபிஎல் ஓனரை கண்டுப்பிடிங்கய்யா.. சம்பள பாக்கி! – புலம்பும் கிரிக்கெட் வீரர்!

ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் குற்றம் சாட்டியுள்ளார்

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மகளிர் உலககோப்பை டி20 போட்டி தொடருக்கான பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ள இன்வாய்ஸ் கோரியுள்ளது பிசிசிஐ.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் சம்பள தொகை தரப்படாமல் உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார். இடதுக்கை பவுலரான பிராட் 10 வருடங்கள் முன்னதாக கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடினார். அதில் சம்பள தொகையில் மீதம் 30% இதுவரை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறியுள்ள பிராட் ஹாட்ஜ் “கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் 30% சம்பளத்தை வழங்கவில்லை. பிசிசிஐ இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணம் பெற்று தருமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.