1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (15:43 IST)

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

டி 20 உலகக் கோப்பை  தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏ பிரிவில் இந்தியா கிட்டத்தட்ட தகுதி பெற்றுள்ள நிலையில் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று இரவு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடக்கவுள்ளது. இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஆஸி அணிக்கு இந்த போட்டியை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஆஸி அணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் இந்திய அணி ரன்ரேட் குறைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும். ஆனால் இது நடப்பதற்காக அரிதான வாய்ப்பே உள்ளதால், இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது 99.9 சதவீதம் உறுதியாகியுள்ளது.