மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் 17 ஆவது சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியோடு வெளியேறியது. இது அந்த அணி ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த போட்டிக்குப் பிறகு அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.
இந்நிலையில் இப்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக் மீண்டும் ஆர் சி பி அணிக்குள் வேறொரு பொறுப்பில் வரவுள்ளார். அவர் ஆர் சி பி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த தகவலை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.