1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (17:20 IST)

திறமையும் தகுதியும் தேவை: தோனியை மறைமுகமாக தாக்கும் ரவி சாஸ்திரி!!

வரும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முழுமையான உடற்தகுதியும் திறமையும் கொண்டவர்களே பங்கேற்க முடியும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 


 
 
இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி தேர்வில் எதிர்பார்த்தது போல தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தோனியின் தேர்வு பல விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது.
 
இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் பேசினார். அவர் கூறியதாவது, வரும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முழு தகுதி உள்ளவர்களே இடம் பெற முடியும். 
 
இலங்கை அணிக்கு எதிரான தொடரின் இந்திய அணி தேர்விலிருந்து ரசிகர்களுக்கும் தேர்வுக் குழுவினருக்கும், எப்படிப்பட்ட வீரர்களை உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என தெரிந்திருக்கும். 
 
உலகக்கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முழு உடற்தகுதியுடனும், திறமை உடைய வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்படுவர். மற்ற விஷயங்கள் எதுவும் இனி எடுபடாது என தெரிவித்துள்ளார்.