செவ்வாய், 25 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (13:53 IST)

அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா? தோனி அளித்த பதில்!

ஐபிஎல் -2023, 16 வது சீசன் இறுதிப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு ஓடுவதற்கு சிரமப்பட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி, ஐபிஎல் கோப்பை முடிந்ததும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

சிகிச்சைக்குப் பிறகு சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று இப்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பதுதான் அவர் ரசிகர்கள் முன்னர் இப்போதுள்ள கேள்வி.

இந்நிலையில் இப்போது பேசியுள்ள தோனி “நவம்பர் மாதத்தில் என் மூட்டுவலி பிரச்சனை தீர்ந்துவிடும் என மருத்துவர்கள் கூறினார்கள். அதனால் நவம்பர் மாதத்தில் நான் அடுத்த சீசனில் விளையாடுவேனா மாட்டேனா என்பது தெரிந்துவிடும்.” எனக் கூறியுள்ளார்.