போலீஸ் ’பைக்’கில் பறந்த கேப்டன் தோனி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 15 ஜூன் 2016 (13:56 IST)
மகேந்திர சிங் தோனி ஜிம்பாப்வே நாட்டு காவலரின் பைக் ஒன்றில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
 
 
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
 
தனது ஓய்வு நேரங்களில் அவர் செல்லும் இடங்களை பைக்கில் சுற்றிப் பார்ப்பதை பொழுதுபோக்காக வைத்திருப்பவர் இந்திய ஒருநாள் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. அது மட்டுமல்லாமல் வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் பைக்குகள் ஓட்டுவதில் அவருக்கு அலாதி பிரியம்.
 
இந்நிலையில், நேற்று தனது ‘இன்ஸ்டாகிராமில்’ இந்திய அணி பயிற்சி சீருடையில் ஜிம்பாப்வே நாட்டு காவலரின் பைக் ஒன்றில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :