வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 12 மார்ச் 2015 (17:53 IST)

சிக்ஸர்களாக விளாசி சாதனை படைத்துள்ள டி வில்லியர்ஸ்

உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசி தென் ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் சாதனை படைத்துள்ளார்.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியோடு மொத்தம் 11 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டுன. 
 
டி வில்லியர்ஸ்
இந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அனியின் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 99 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதில் 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். உலகக்கோப்பை போட்டியில் 99 ரன்களில் இது மூன்றாவது நிகழ்வாகும். தென் ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் 99 ரன்னில் அவுட்டாவது இதுவே முதன் முறையாகும்.
 
இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்கவின் ழான் பால் டுமினி ஆகிய இருவரும் 99 ரன்களில் அவுட்டாகியுள்ளனர். இதோடு இந்த உலகக் கோப்பையில் தனி நபராக இந்த தொடரில் டி வில்லியர்ஸ் 20 சிக்ஸர்களை விளாசி தள்ளியுள்ளார்.
 
இதன் மூலம், தனிநபர் ஒருவர் 20 சிக்ஸர்களை அடிப்பது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ ஹைடன் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 18 சிக்ஸர்கள் விளாசியதே அதிகபட்சமாகும்.
 
இன்று நடைபெற்ற போட்டி தென் ஆப்பிரிக்கா அணியின் 1000மாவது ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் டி வில்லியர்ஸ் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே அவரது சிறந்த பந்துவீச்சாகும்.