வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 13 மே 2023 (11:08 IST)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும், இதுபோல தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தேசிய அணி பல தொடர்களை வரிசையாக தோற்று வருகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு முறை டி 20 உலகக் கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டனான டேரன் சமி, இப்போது அணிக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.