சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும் நடிகை கீதா பாஸ்ராவுக்கும் இன்று திருமணம்


Ashok| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2015 (07:08 IST)
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின்  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவுக்கும் இன்று திருமணம் வெகு விமர்சியாக நடைபெறுகிறது.

 

 
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும்  பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் இந்து முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. 
 
 முன்னதாக நேற்று மாலை ஜலந்தரில் பிரமாண்டமாக நடைபெற்ற மணமகன் மணமகள் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் தங்களுக்குள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் தோழர்கள் கலந்துக்கொண்டனர். அப்பொழுது மெஹந்தி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து தில்லியில் வரும் 1ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :