154 பந்துகள், ஒரு ரன்கள் கூட இல்லை - ஆஸ்திரேலிய அணி 'சாதனை'!


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 31 ஜூலை 2016 (12:03 IST)
ஆஸ்திரேலியாவின் பீட்டர் நெவில், ஸ்டீவ் ஓ'கீபே மற்றும் ஹசில்வுட் ஆகியோர் 154 பந்துகளை சந்தித்து ஒரு ரன்கள் கூட எடுக்காமல் சாதனைப் படைத்துள்ளனர்.
 
 
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் மிகச் சிறந்த அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியினர், நேற்று மற்றொரு 'சாதனையை' நிகழ்த்தியிருக்கின்றனர் .
 
தாங்கள் நினைவில் வைத்துப் பெருமைப்படும் சாதனையல்ல அது - 154 பந்துகளை ஒற்றை ரன் கூட எடுக்காமல் கையாண்ட 'சாதனையை' அவர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர்.
 
டெஸ்ட் போட்டியென்றாலே மெல்லத்தான் நகரும் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இது ஆமை வேகத்தைத் தாண்டி நத்தை வேகத்தில் ஆடிய ஆட்டம்தான்.
 
9-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் நெவில் உடன் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே ஜோடி சேர்ந்தார். அப்போது நெவில் 26 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்தார்.
 
ஓ'கீபே தான் சந்தித்த 22-வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். அதன்பின் அவர் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. நெவிலும் ஒரு ரன்கள் கூட அடிக்கவில்லை. 63-வது ஓவருக்குப்பின் 85-வது ஓவர் வரை ஒரு ரன் கூட அடிக்காமல் தொடர்ந்து 22 ஓவர்களை மெய்டனாக்கினார்.
 
பல்லேகலவில் நடந்த இந்த முதல் டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடினார். ஆனாலும் தோல்வியை அவர்கள் தவிர்க்க முடியவில்லை. இலங்கை அணி 106 ரன் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது.
 
இலங்கை அணி ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டியில் வெல்வது இது இரண்டாவது முறை மட்டுமே. இலங்கையில் நடக்கும் இந்த மூன்று டெஸ்ட் தொடரின் அடுத்த டெஸ்ட் காலியில் வியாழனன்று தொடங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :