Daily Horoscope
✕

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

Written By vinoth
Updated: வெள்ளி, 18 ஜூலை 2025 (08:49 IST)
ஆஸி அணி தற்போது டெஸ்ட் விளையாடும் அணிகளில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங்குக்கு இணையாக பவுலர்களும் நட்சத்திர அந்தஸ்து பெற்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைத்துப் போட்டிகளையும் வென்றது. அதற்கு அந்த அணி பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஐந்து பவுலர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். ஆஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் மூன்றாம் இடத்திலும், ஹேசில்வுட் நான்காம் இடத்திலும், ஸ்காட் போலண்ட் ஆறாவது இடத்திலும், நாதன் லியான் எட்டாவது இடத்திலும் மிட்செல் ஸ்டார்க் பத்தாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

மீண்டும் அணி மாறிய ஹர்திக் பாண்டியா.. ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த நடிகையின் அணி...

டெஸ்ட் போட்டிக்கு இந்த பவுலர் அணிக்கு நிச்சயம் தேவை: ரவிசாஸ்திரி கருத்து...

ஒரே இன்னிங்ஸில் 5 பேர் அரைசதம்.. பேட்டிங்கில் அசத்திய பாகிஸ்தான்.. பதிலடி கொடுக்குமா இலங்கை?

இந்தியா - நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி.. ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து..

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை செய்த முதல் அணி ஜிம்பாவே தான்.. வரலாற்று சாதன...

அடுத்த கட்டுரையில்
Show comments