1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. AsiaCup2023 Nepals batting action this is the winning target

#AsiaCup2023 : அதிரடி பேட்டிங் செய்த நேபாளம் அணி...வெற்றி இலக்கு இதுதான்!

India - Nepal
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்   இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா இந்தியா –  நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில்  இன்று  நடைபெற்று வருகிறது.
 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணியில், குஷாய் 38 ரன்னும், அசய்ப் 58 ரன்னும், ஜா 23 ரன்னும், திபேந்திரா 29 ரன்னும், காமி 48 ரன்னும் அடித்தனர். 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே இந்திய அணிக்கு 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.

இதற்கு முந்தைய போட்டியைப் பபோன்று இன்றைய போட்டியிலும் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழைக்குப் பின் மீண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில், சமி, பாண்ட்யா, தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிராஜ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அடுத்த கட்டுரையில்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!