1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 24 ஏப்ரல் 2017 (17:37 IST)

தோனிக்காக பேண்ட்டையும் கழற்ற தயார்: ஷாருக்கான்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்க அணிந்திருக்கும் பேண்ட்டை கூட விற்க தயார் என கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவில் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 10வது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொல்கல்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் நான் தோனியை வாங்க, அணிந்திருக்கும் பேண்ட்டை கூட விற்க தயார் என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பின் தோனியை புனே அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. ரூ.12.5 கோடிக்கு மொத்தமாக அவர் புக் செய்யப்பட்டதால் வீரர்கள் ஏலம் விடும் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை.
 
ஏலத்தில் தோனி பெயர் இடம்பெற்றல், அவரை எப்படியாவது ஏலத்தில் எடுப்பேன், ஆனால் இதுவரை அவர் இந்த வட்டத்துக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.