என்னிடம் இன்னும் கிரிக்கெட் மீதமுள்ளது… துணைக் கேப்டன் ரஹானே நம்பிக்கை!

புதன், 12 ஜூலை 2023 (07:56 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மண்ணைக் கவ்வியது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடியது அஜிங்க்யா ரஹானேதான்.

18 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த அவர்  இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகியுள்ளார்.

இன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் “நான் இன்னும் இளமையாக உள்ளேன். என்னிடம் இன்னும் கிரிக்கெட் உள்ளது. கடந்த சில மாதங்களாக என்னுடைய உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்தேன். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறேன்.

ரோஹித் ஷர்மாவின் கீழ் துணைக் கேப்டனாக விளையாடுவது சிறப்பான அனுபவம். அவர் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர்களை ஆதரிக்கிறார். மீண்டும் அணியில் ஒரு வீரராகவும், துணைக் கேப்டனாகவும் திரும்பியதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments