1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (17:46 IST)

ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டது மிகவும் நல்லது : கங்குலி கருத்து

ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றச்சாட்டுக்களில் இருந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களை விடுவித்தது அவர்களுக்கு மிகவும் நல்லது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
 

 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தும், அவரது சக விளையாட்டு வீர்ர்களான அஜித் சண்டிலா மற்றும் அங்கீட் சவான் ஆகியோர் மீது 2013இல் ஏமாற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
தாம் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று இந்த மூன்று வீர்ர்களும் வலியுறுத்தி வந்தனர். இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதாது என்று கூறிய நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை சனிக்கிழமை விடுவித்தது.
 
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, “இது அவர்களுக்கு மிகவும் நல்லது. வீரர்கள் நினைத்ததை நீதிமன்றம் சரியாக செய்துள்ளது” என்று வங்காள கிரிக்கெட் வாரியத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
 
மேலும் ஸ்ரீசாந்த் குறித்து கூறிய கங்குலி, “நீதிமன்றம் அவர் மீதான் குற்றச்சாட்டுக்களை அகற்றிவிட்டது. பிசிசிஐ-க்கு இது ஒரு பிரச்சனையாக கருதலாம் என்று நினைக்கவில்லை” என்றார். எனினும் கங்குலி, நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
 
”இது மிகவும் சட்டம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். இந்த கேள்விக்கு என்னால் பதில் முடியாது” என்றார்.