என்ன சொந்த நாட்டு மக்களே வந்து பாக்கல… வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு நடந்த சோகம்!
டி 20 உலகக் கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இதில் கியானாவில் நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியு கினியா ஆகிய நாடுகள் மோதின. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால் சொந்த நாட்டு அணியை உற்சாகப்படுத்த அந்த நாட்டு மக்களே வரவில்லை.
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விலையை மிக அதிகமாக நிர்ண்யித்துள்ளதாம் ஐசிசி. அதனால் மக்கள் இந்த போட்டியை பார்க்க ஆர்வம் காட்டவேயில்லை என்று சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக இந்த போட்டியை நடத்திய நேரம் தவறான நேரம் என்று சொல்லப்படுகிறது. இந்தியப் பார்வையாளர்களைக் கணக்கில் கொண்டு போட்டியை காலை 10 மணிக்கு நடத்தியுள்ளனர். இதனால் மக்கள் பெரியளவில் போட்டியை பார்க்கவரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஐசிசி மீது கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.