செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. வீரர்கள்
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (16:38 IST)

கிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த "விராட் கோலி"!

சச்சின் மற்றும் தோனியை பின்னுக்குத் தள்ளி கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 

 
2018-ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டும் 100 இந்திய பிரபலங்களின் பட்டியலை போபர்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 
 
அதிகம் வருமானம் பெரும் இந்திய டாப் நடிகர்களின் லிஸ்டையும் இந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கான்  முதல் இடத்தை பிடித்திருந்தார். 
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 228.09 கோடி ரூபாய் சம்பாதித்து  இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். 
 
இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் கோலி, கடந்த ஆண்டு வருமானமான ரூ. 100.72 கோடியை விட நடப்பாண்டில் ரூ. 228.09 கோடி வருமானம் ஈட்டி, முதல் இடத்தை பெற்றுள்ளார்.  அடுத்த இடமான இரண்டாம் இடத்தில் இந்த ஆண்டு 101.77 கோடி  ரூபாய் சம்பாதித்து ‘தல’ தோனியும், மூன்றாவது இடத்தில் நடப்பாண்டில் 80 கோடி ரூபாய் சம்பாதித்து, இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அடையாளமான சச்சின் டெண்டுல்கரும் இருக்கின்றனர்.
 
இதேபோல் இப்பட்டியலில் 4வது இடத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து இடம் பெற்றுள்ளார். இவருடைய நடப்பு ஆண்டு வருமானம் 36 கோடியே 50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.