ஸ்லீவ்லெஸ் ட்ரஸ்... ஸ்லிம் பிட் லுக் - ஜிவ்வுனு இழுக்கும் விஜே ரம்யா!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
இதனிடையே எடை குறைத்து ஸ்லிம்மான லுக்கிற்கு மாறிய விஜே ரம்யா தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழககாய் போஸ் வெளியிட்டு இணையவாசிகளை மெய்மறக்க செய்துள்ளார். அம்மணியின் ஸ்லிம் பிட் லுக்கிற்கு லைக்ஸ் அள்ளுது.