Last Modified செவ்வாய், 18 ஜூன் 2019 (13:10 IST)
சிம்பு தற்போது கௌதம் கார்த்திக்குடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
மஃப்டி என்ற கன்னட வெற்றிப்படத்தை இயக்கிய நார்தன் இயக்கவுள்ள இப்படம் மெகா பட்ஜெட்டில் , ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாகவும் படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கன்னடத்தில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகர் சிம்பு தண்டர்போல்ட் தாதாவாக நடிக்கிறார். அவரை கைது பண்ண துடிக்கும் அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் கருப்பு சட்டை அணிந்து காலா ரஜினி ஸ்டைலில் கெத்தாக அமர்ந்துள்ளார் சிம்பு.