1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (12:22 IST)

இயேசு சிலுவையில்‌ அறையப்பட்டது எந்த நாள் தெரியுமா...?

Good Friday
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில்‌ அறையப்பட்ட நாள்‌ தான்‌புனித வெள்ளி. புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களால்‌ கொண்டாடப்படும்‌ ஒரு முக்கியமான நாளாகும்‌.


இயேசு சிலுவையில்‌ மரித்ததையும்‌. அவர்‌ அடைந்த துன்பங்களையும்‌ நினைவு கூறும்‌ விதமாக இந்த விழா கொண்டாடப்படுதிறது. இந்த புனித வெள்ளி, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர்‌ பண்டிகைக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்‌.

இயேசவின்‌ சீடரான யூதாஸ்‌ 30 வெள்ளி காசுக்காக இயேசுவை காட்டி கொடுத்தார்‌. பின்‌ஜெருசலத்தில்‌ உள்ள காவலர்களால்‌ இயேசு கைது செய்யப்பட்டார்‌. இயேசு முள்‌ கிரீடத்தை அணிந்து கொண்டு. சிலுவையை சுமந்து கல்வாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர்‌ பல துன்பங்களையும்‌ அடைந்தார்‌. பின்‌ இயேசு சிலுவையில்‌ அறையப்பட்டு உயிர்‌ நீத்தார்‌.

இயேசு சிலுவையில்‌ அறையப்பட்ட நாள்‌ வெள்ளிக்கிழமை என்று கூறப்படுகிறது. மீண்டும்‌ இயேசு ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார்‌ என்றும்‌ வரலாறு கூறுகிறது. அதனால்‌ இயேசு உயிர்‌ நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும்‌. மீண்டும்‌ உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டராகவும்‌ கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்‌.