திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (14:47 IST)

கிறிஸ்தவர்களால் பெரிய வியாழன் சிறப்பாக கூறப்படுவது ஏன்...?

Jesus
இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாளில் தம்முடைய சீடர்களோடு இணைந்து இரவு உணவு அருந்தும் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியாக இந்த பெரிய வியாழன் அமைந்துள்ளது.


இந்த பெரிய வியாழன் ஆண்டு தோறும் இயேசு உயிர்தெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகிற ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய 6 நாட்களை பரிசுத்த நாட்களாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து அதில் இந்த பெரிய வியாழனையும் நினைவுகொள்கின்றனர். இது குறித்து வேதாகமத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி பகுதிகளில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

பெரிய வியாழன், இரண்டாம் நாள் புனித வெள்ளி, மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடைபிடிக்கின்றனர்.

பெரிய வியாழன் அன்று இயேசு 3 முக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார். முதலில் இயேசு பெரிய வியாழன் அன்று தன்னுடைய சீடர்களுடன் உணவு உட்கொண்டு நற்கருணை எண்ணும் அப்பம் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.

இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களுக்கு பணிசெய்யும் பொறுப்பையும் போதகர்களிடம் ஒப்படைத்தார் என்பது தான் குருத்துவத்தை ஏற்படுத்துதல் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே தான் இயேசு உயிர்த்தெழுந்த முந்தைய வியாழக்கிழமையை பெரிய வியாழன் என்று போற்றப்படுகிறது.