கிறிஸ்துமஸ் விழாவில் இடம்பெறும் கிறிஸ்துமஸ் தாத்தா....

Sasikala| Last Modified வியாழன், 22 டிசம்பர் 2016 (17:57 IST)
கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம்  நாள் கொண்டாடப்படுகிறது.கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து  என்பன பொதுவாக அடங்கும்.
 
கிறிஸ்துமஸ் மாதத்தில் வெள்ளைத் தாடி, சிவப்பில் தொப்பி மற்றும் ஆடை அணிந்து வருவார் கிறிஸ்துமஸ் தாத்தா என்கிற  சாண்டாக்ளாஸ். இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டு போவதாக உலகமெங்கும்  இருக்கும் குழந்தைகளை நம்பவைக்கிறார்கள். துருக்கி நாட்டைச் சார்ந்த செயின்ட் நிக்கோலஸ் என்கிற பாதிரியார்தான் உலகின்  முதல் கிறிஸ்துமஸ் தாத்தா என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு வரலாற்று ரீதியாக எந்த ஆதாரமும் இதுவரை  முன்வைக்கப்படவில்லை.
 
1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது அரசுமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ்  மரத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தியை வைத்து இயேசுவை வணங்கும் வழக்கம் ஜெர்மானியர்களிடம் இருந்து வந்துள்ளது. மேலும் இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன் முதலில் பைபிள் மொழி  பெயர்க்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :