1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. கவனம் ஈர்க்கும் வேட்பாளர்கள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:52 IST)

புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆட்சி!

புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பர்வேஸ் வெற்றி பெற்றுள்ளார். 
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதுதவிர தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பர்வேஸ் வெற்றி பெற்றுள்ளார். முதலில் திமுகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்ட விஜய் மக்கள் இயக்கம் பின்னர் சுயேட்சையாக தங்களது வேட்பாளர்களை களமிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.