இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் !!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 1 பிப்ரவரி 2021 (07:55 IST)
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 

 
மத்திய அரசின் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் தொடர் கூட்டம் தொடங்கி நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மீதான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி (இன்று) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
 
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கொரோனா காரணமாக முதன்முறையாக அச்சு வடிவில் இல்லாமல், மின்னணு முறையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
ஒருபுறம் குறைவான வருவாய், மறுபுறம் அதிகரித்துவிட்ட செலவினங்கள் என்ற இக்கட்டான சூழலில் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :