1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (19:18 IST)

தமிழ் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் - டாப்ஸி

ஆரம்ப காலங்களில், தமக்கு உதவிய தமிழ் திரையுலகில் நடிக்க மறுத்துள்ளார் நடிகை டாப்ஸி.
ஆடுகளம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. அதற்குப் பிறகு ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா  வை படங்களில் நடித்துள்ளார்.
 
பின்னர் ஹிந்தி திரையுலகில் பிரபலமானார் டாப்ஸி. தற்பொழுது டாப்ஸியிடம் 4 ஹிந்தி படங்கள் கைவசம் உள்ளன. அவர் ஹிந்தியில் பிங்க் படத்தில் அமிதாப்புடன் நடித்துள்ளார். மேலும் இன்னொரு படத்தில் அமிதாப்புடன் நடிக்கவுள்ளார்.
 
இந்நிலையில் தமிழ் இயக்குனர் ஒருவர் டாப்ஸியை தனது படத்தில் நடிக்கும்படி அணுகியுள்ளார். ஆனால் அவரோ ஹிந்தியில் பிஸியாக உள்ளதால் இனி தென்னிந்திய மொழிகளில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.