1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (11:52 IST)

பணிந்தது தெலுங்கு திரையுலகம்: ஸ்ரீரெட்டியின் அரைநிர்வாண போராட்டத்திற்கு வெற்றி!

தெலுங்கு திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை நடிகை ஸ்ரீரெட்டி கூறியதால் அதிர்ச்சியான தெலுங்கு திரையுலகம், அவர் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதித்தது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் அலுவலகம் முன்னர் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ஸ்ரீரெட்டி அரைநிர்வாண போராட்டம் நடத்தினார். இந்த காட்சிகள் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி தெலுங்கு திரையுலகிற்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் ஸ்ரீரெட்டிக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 20 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்குவதாக தெலுங்கு நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறிதாவது:
 
நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தெலுங்கு ஃபிலிம் சேம்பர் விசாரணைக்குழுவை அமைத்துள்ளதால், அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் தொடர்ந்து நடிக்கலாம்ம் மேலும், நடிகை கூறிய குற்றச்சாட்டுகள் சங்க உறுப்பினர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா தெரிவித்தார். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுவதால் இனி ஸ்ரீரெட்டி லீக்ஸ் இருக்காது என்றே கருதப்படுகிறது.