திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (19:31 IST)

ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அட்லி மும்பையில் தொடங்கியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டதில் ஷாருக் கான் மன உளைச்சலில் உள்ளாராம். இதனால் படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்பதே நிச்சயமாக அட்லி உட்பட யாருக்கும் தெரியவில்லையாம். இதனால் அந்தப்படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.
 
ஆனால், உண்மையில் நயன்தாரா விலகவில்லை அவரை படக்குழு தூக்கிவிட்டது. ஆம், நயன்தாரா படத்தில் நடிக்க நிறைய கண்டீஷன்  போட்டாராம். 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு ஒரு வாரம் மட்டுமே நடித்த நயன்தாரா தான் எந்த தேதியில் கால்ஷீட் கொடுத்தேனோ அதன் தேதியில் மட்டும் தான் நடிப்பேன் என கூறினாராம். 
 
அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பிற்கு வர தனக்கென தனி விமானம் வைக்க சொன்னாராம். அதோடு படம் சம்மந்தப்பட்ட அனைத்திலும் என் பெயருக்கு முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் என போடவேண்டும் என கூறினாராம் இதையெல்லாம் கேட்டு கடுப்பான தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை தூக்க சொல்லி உத்தரவிட சமந்தாவிடம் அணுகியுள்ளார் அட்லீ. கணவரை பிரிந்த சமயத்தில் பாலிவுட்டில் நுழையவேண்டும் என்ற கனவில் இருந்த சமந்தா இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஓகே சொல்லிவிட்டாராம்.