200 கோடிக்கு இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படத்தைக் கைப்பற்றிய அமேசான் ப்ரைம்!
அமேசான் ப்ரைம் நிறுவனம் இந்தியில் சல்மான் மற்றும் ஷாருக் கான் ஆகிய இருநடிகர்களின் அடுத்த படங்களைக் கைப்பற்றியுள்ளது.
உலகளவில் ஓடிடி தளங்களின் ஆதிக்கத்தில் அமேசான் ப்ரைம் நிறுவனமும் நெட்பிளிக்ஸ் தளமும் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் தென்னிந்திய மொழிகளில் அமேசான் ப்ரைம் கோலோச்சுகிறது. இந்நிலையில் வட இந்தியாவிலும் இப்போது உச்ச நடிகர்களின் படங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக சல்மான் கான் நடிப்பில் உருவாகும் டைகர் 3 மற்றும் ஷாருக்கானின் அடுத்த படம் என இரு படங்களை சுமார் 200 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.