1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: வியாழன், 25 மே 2017 (16:46 IST)

சச்சின் படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்து எமோஷ்னல் ஆன தோனி!

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்'. இந்திய கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பது சச்சின் படத்தை தான். ஏற்கனவே தோனியின் வாழ்க்கை  வரலாறு படமாக வந்து செம்ம ஹிட் கொடுத்தது. 

 
இந்த இலையில் நாளை உலகம் முழுவதும் சச்சினின் வாழ்க்கை படமான 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீமியர் நேற்று இந்திய  கிரிக்கெட் வீரர்களுக்கு திரையிடப்பட்டது. இதை பார்த்த தோனி கண் கலங்கிவிட்டார். பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் இந்த படம் இளைஞர்களுக்கு கண்டிப்பாக தன்னம்பிக்கை தரும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
சச்சின் என்றாலே கிரிக்கெட் என்பது மட்டுமே நமக்கு தெரியும் அதையும் தாண்டி அவரின் வாழ்வில் நடந்த பல விஷயங்களை  இதில் படமாக்கியுள்ளனர். யாரும் இந்த படத்தை தவற விடாதீர்கள் என உருக்கமாக கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.