திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (09:28 IST)

அடிச்ச நொறுக்கும் "பதான்" KGF வசூலை முறியடிக்குமா? - Box Office நிலவரம்!

பாலிவுட் சினிமாவின் கிங் நடிகரான ஷாருக்கான் தொடர்ந்து கடைசியாக அவர் பல படங்கள் படுதோல்வி அடைந்தது. மிகுந்த விரக்தியில் இருந்த ஷாருக்கானுக்கு பதான் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. 
 
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில்கடந்த 25-ஆம் தேதி  வெளியான இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
படம் வெளியாவதற்கு முன்னரே பெரும் சர்ச்சைகளை சந்தித்த பதான் வசூலில் வேட்டை நடத்தி வருகிறது.  வெளியாகி 7 நாட்களில் பதான் ரூ. 429 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் KGF வசூல் சாதனையை முறையடிக்குமா என பார்க்கலாம்.