1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (16:27 IST)

அவர்கள் உறவு கொள்வதை கூலாக நினைக்கலாம்; நான் அப்படியில்லை; நடிகர் மீது மாடல் அழகி புகார்

பார்த்தின் நட்பு வட்டாரத்தில் உள்ள பெண்கள் வேண்டுமானால் அவருடன் உறவு கொள்வதை கூலாக என நினைக்கலாம். நான் அப்படிப்பட்டவள் இல்லை என பிரபல தொலைக்காட்சி நடிகர் பார்த் சம்தான் மீது 20 வயது மாடல் அழகி ஒருவர் மும்பை போலீஸிடம் புகார் அளித்துள்ளார். 


 


 
கெய்சி ஹை யாரியான் என்ற இந்தி தொலைக்காட்சி தொடர் மூகம் பிரபலம் ஆனவர் பார்த் சம்தான். இவருடன் 4 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்த 20 வயது மாடல் அழகி ஒருவர் மும்பை காவல்துறையிடம் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
 
பார்த் என்னுடன் ஜாலியாக இருக்க நினைத்து பார்த் பல முறை எனக்கு புரபோஸ் செய்துள்ளார். அவரின் நோக்கம் தெரிந்து நான் அவரின் கோரிக்கையை ஏற்கவில்லை. பார்த்தின் நட்பு வட்டாரத்தில் உள்ள பெண்கள் வேண்டுமானால் அவருடன் உறவு கொள்வதை கூலாக என நினைக்கலாம். நான் அப்படிப்பட்டவள் அல்ல. 
 
ஒரு நாள் பார்ட்டியில் இருந்து வீடு திரும்பும்போது குடிபோதையில் பார்த் என்னிடம் தவறாக நடந்தார். அதில் இருந்து அவருடன் பேசுவதை நிறுத்தினேன். அதன்பிறகு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். 
 
இதையடுத்து பார்த்துடன் படுக்காததால் அவர் என் புகைப்படம், செல்போன் எண்ணை வாட்ஸ்ஆப் குரூப்பில் வெளியிட்டு என்னைப்பற்றி தவறாக குறிப்பிட்டார். இதனால் பலரும் போன் செய்து என்னை தவறான காரியத்திற்கு அழைத்தனர்.
 
பார்த் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் எனது தாய் தான் எனக்கு தைரியம் அளித்தார். அதன் பிறகுதான் துணிந்து இந்த புகார் அளித்துள்ளேன், என தெரிவித்துள்ளார்.