திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (18:10 IST)

பாதியில் நிறுத்தப்பட்ட கே.ஜி.எஃப்-2 - அதிரடி முடிவெடுத்த படக்குழு!

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.  


 
கன்னட சினிமாவின் தற்போதைய ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.  அதுமட்டுமின்றி  இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி  கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.
 
கன்னட சினிமாவில் முதன் முறையாக 100 கோடி வசூல் ஈட்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கே.ஜி.எஃப் படத்திற்கு சமீபத்தில் தான் சிறந்த சண்டை காட்சிகளுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. 
 
இதற்கான படப்பிடிப்பிற்காக கோலார் தங்க வயல் அருகே செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இப்படத்தின் படப்பிடிப்பிற்கு நீதிமன்றம் தடைவிதித்தது. அதற்கான காரணம், அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கபபடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் கே.ஜி.எஃப் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.